இலங்கையில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இந்த வார இறுதியில் காலாவதியாகவிருந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வருகிறது.
மேலும், கடந்த ஜூலை 18 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் ஜுலை 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனப்படி எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.