உத்திரபிரதேசத்தில் மணமகள் ஹரித்வாரில் வசிப்பவர் என்றும் மணமகன் பிஜ்னோரில் உள்ள குந்தா குர்த் என்னும் கிராமத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது
கோவிலில் திருமணம் முடிந்த நிலையில் மணமகன் வீட்டிற்கு தனது புதுமனைவியை அழைத்து வந்துள்ளார் புதுமணத்தம்பதிகளை அன்புடன் வரவேற்ற உறவினர்கள், அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர்
இந்நிலையில் திருமணமான அன்று இரவு மணமகள் இரும்பு கம்பியால் மணமகனை தாக்கி அவரை காயமடைய செய்ததோடு, அங்கிருந்த நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் மணப்பெண் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்
மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவ்வாறு அண்மையில் உத்திர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு மணமகள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் தப்பி ஓடிய மற்றொரு நிகழ்வு நடந்தது அங்கு புதிதாக திருமணமான மணமகள் விலைமதிப்பற்ற பொருட்களை திருடி திருமணமான 5 மணி நேரத்திற்குள்ளாகவே காணாமல் போனார்
இதையடுத்து தொடந்து நடக்கும் மணமகள் கொள்ளையால் உத்திர பிரதேசத்தில் உள்ள மணமகன்கள் மிகவும் கவலையில் உள்ளனர்