யூடியூப்பர் ஒருவர் பாம்புக்கு நவீன முறையில் ரோபோடிக் கால்களை உருவாக்கி அதில் பாம்பை நடக்க வைத்து காணொளியைப் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த காணொளி வைரலாகியுள்ளது.
பாம்புகள் மேல் ஆர்வம் கொண்ட அந்த நபர் அதனை நடக்க வைப்பதிலும் ஆர்வமாக இருந்துள்ளார். அவர் நவீன ரோபோடிக் கண்டுபிடிப்புகளைச் செய்து அதனைக் காணொளியாகப் பதிவிட்டு வந்துள்ளார்.
இணையத்தில் பெருமளவு கவனத்தை ஈர்த்த பாம்பு நடக்கும் காணொளியை அவர் உருவாக்கப் பலநாள் பெற்றுள்ளது.
முதலில் பாம்புக்குப் பிறவியில் கால் இருந்தது என்று அவர் தெளிவுப்படுத்திகொள்கிறார். அதனை அவர் ரோபோடிக் முறையில் மறுபடியும் கொண்டுவர விரும்பி தற்போது நவீன கால்களைக் கொடுத்துள்ளார்.
இந்த வகையில் பாம்புக்கு ரோபோ கால்களைச் செய்யத் தேவையான ஆராய்ச்சிகளையும் செய்துள்ளார். ஓநாய் போன்ற உயிரினங்களில் நடக்கும் தன்மையை ரோபோவிற்கு அளித்து அதில் பாம்பை வைத்து நடக்க வைத்துள்ளார்.
இந்த காணொளி பதிவேற்றப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் தற்போது 2.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.