கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கலவரத்தில் எரிக்கப்பட்ட கம்பஹா உடுகம்பொல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் அலுவலகம் பிரதேசவாசிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நேற்று (13-08-2022) புணரமைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அலுவலகம் எரிக்கப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்களைச் சந்திக்கவோ, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அமைச்சரால் முடியவில்லை.
இதனால் அமைச்சரும், அவரது அரசியல் ஆதரவாளர்களும் கடும் சிரமத்துக்குள்ளாகியிருந்தனர்.
இந்த நிலையிலேயே பிரதேச மக்களும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து அவரது அரசியல் அலுவலகத்தை புனரமைத்துள்ளனர்.