இந்தியாவில் புலி மற்றும் சிறுத்தையை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிட்ட நான்கு பேரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
இந்திய மாநிலம் கர்நாடகாவில் கடந்த ஆண்டு வனப்பகுதியில் ஒரு புலி மற்றும் சிறுத்தையை வேட்டையாடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை கர்நாடக வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் அருணா, நஞ்சுண்டா மற்றும் ரவி ஆகிய 3 பேர் நாடோடி பழங்குடியினர் என்றும் ரமேஷ் குமார் என்பவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.வன விலங்குகளை வேட்டையாடுவதில் தேர்ச்சிபெற்றதாக கூறப்படும் அவர்கள், கடந்த அக்டோபர் மாதம் Veeranahosahalli பகுதியில் ஒரு புலியையும், Hunasekatte பகுதியில் ஒரு சிறுத்தையையும் கண்ணி வெடி மற்றும் தாடைப் பொறிகளைபி பயன்படுத்தி கொடூரமாக வேட்டையாடியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
அவற்றை கொன்று, கறியை சுட்டு சுவைத்ததாகவும், சுவை நன்றாக இல்லை என்பதால் ஆற்றில் விசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிடிபட்டவர்களில் ஒருவர் சட்டவிரோதமாக புலித்தோல்களை கடத்தும் நபருடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் தெரிவித்துள்ளனர்.