இந்தியாவை சேர்ந்த இந்தியர் ஒருவருக்கு, துபாயில் நடந்த லொட்டரி குழுக்களில் 2 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளதால், அவர் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஆண்டனி ஜாய் என்ற 39 வயதான நபர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஓமானுக்கு குடிபெயர்ந்தார்.
இங்கு வந்து, கட்டுமான நிறுவனம் ஒன்றி தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார். அதன் படி அவருக்கு மாதம் 3000 திர்ஹாம் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்திய Mahzooz லொட்டரி குலுக்கலில், ஆண்டனி ஜாய்க்கு 2 மில்லியன் திர்ஹாம்(இலங்கை மதிப்பில் 10 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இதை என்னா நம்பவே முடியவில்லை. கனவு போல் இருக்கிறது. நான் இதை வாங்கும் போது எனக்கு அதிர்ஷம் இருக்கும் என்று நம்பவில்லை, ஆனால் அது இப்போது உண்மையாகிவிட்டது.
எனக்கு வங்கிக்கடன்கள் இருக்கிறது. இந்த தொகை அந்த வங்கிக்கடன்களை அடைக்கவும், பெற்றோர்களை கவனித்து கொள்ள உதவும்.
அதுமட்டுமின்றி, நான் சில தொண்டு நிறுவனங்களுக்கும் இதில் வரும் பணத்தை நன்கொடை அளிக்க விரும்புகிறேன். ஆனால் இந்த பணம் செலவிடுவதில் எந்த ஒரு அவசரமும் காட்டவிரும்பவில்லை என்று கூறினார்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த குலுக்களில், ஆறு எணிகளில் ஐந்து எண்கள்((9-10-16-17-34-36) ), இவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டுடன் பொருந்தியுள்ளது.
அடுத்த Mahzooz குலுக்கள் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 3-ஆம் திகதி) உள்ளூர் நேரப்ப்டி இரவு 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குலுக்கான டிக்கெட் விலை 35 திர்ஹாம் எனவும், இதை Mahzooz இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.