குற்றம் நிரூபிக்கப்படாமையால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் திட்டமொன்றுக்காக முதலீடு செய்ய முன்வந்த ஜப்பானிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இந்த குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதேவேளை இந்தக் குற்றச்சாட்டின் மூலம் நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் சுதந்திரமான விசாரணையை கோரியிருந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.