பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை அருகே இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு பதினேழு வயது மகன் இருக்கின்றான் அன்பு குமார் என்ற அந்த சிறுவன் அங்கு இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்
தனது நண்பரின் வீட்டிற்கு செல்வதாக நேற்று முன்தினம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை இத்தகைய சூழலில், பல இடங்களில் அவர்கள் தேடியும் கிடைக்காமல் திடீரென்று அங்கு இருக்கும் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரில் சடலமாக கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் கொடுக்க உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் சிறுவனை தண்ணீரில் இருந்து மீட்டனர்
அப்போது சிறுவனின் கை மற்றும் வாயில் காயங்கள் இருந்ததால் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ அடித்து கொலை செய்து விட்டதாகவும் காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்
இந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் யாரோ சிறுவனை அடித்துக் கொலை செய்து தண்ணீரில் வீசி விட்டு சென்றனர் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்