யாழில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் புதிய சந்தை தொகுதியில் 551 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகள், முல்லேரியா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதன் முடிவுகளிலேயே, சந்தை கட்டிட தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்கள் என 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், புதிய சந்தை தொகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கடந்த சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் யாழ் நகர வர்த்தகர்கள், பணியாளர்கள என 1400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் ஒரு பகுதியின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.