ஒகஸ்ட மாதத்திற்கு தேவையான டொலர்களை பெறுவதில் சவால்கள் உள்ளதால் எரிபொருள் இறக்குமதியிலும் தடைகள் வரலாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்திற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பலத்த சவால் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
மாதம் ஒன்றுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய 500 – 600 மில்லியன் டொலர்கள் தேவை. 200 மில்லியன் டொலர்களை மத்திய வங்கி வழங்குகிறது.
மீதியை நாம் வங்கி மற்றும் ஏற்றுமதியாளர்களிடமே பெறவேண்டும். அது மிகக்கடினமானது.
அதனால் நாம் எமது இறக்குமதியை 200 மில்லியன் டொலர்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.
அடுத்த மாதத்திற்கு தேவையான டொலர்களை வழங்குவதில் சிரமம் உள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
ஒகஸ்ட மாதத்திற்கு தேவையான டொலர்களை பெறுவதில் சவால்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.