கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கி திருடப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
தியவன்னா ஓய அருகில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி கடற்படையின் நீர்மூழ்கிப் படை அதிகாரிகள் குறித்த துப்பாக்கியை கண்டுபிடித்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்