போதையில் தகராறு செய்ததால் ரேஷன் கடை ஊழியறை கொன்ற கள்ளக்காதலி மற்றும் அவரது தோழியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர் மேலத்தெருவில் கருவேல மரத்தில் வாலிபர் சடலம் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தூங்கில் தொங்கியவர் காக்கழனி காலனி தெருவை சேர்ந்த அய்யப்பன் (22) என்பதும் செருநல்லூர் ரேஷன் கடையில் உதவியாளராக வேலை செய்தார் என்பதும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- அய்யப்பனுக்கும் செருநல்லூரை சேர்ந்த ஆனந்தன் மனைவி ரஜிபாணி(34) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். ரஜிபாணிக்கு 2 குழந்தைகள் உள்ள அய்யப்பன் நேற்று போதையில் ரஜிபாணி வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு ரஜிபாணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரஜிபாணி அவரது உறவினர் கவுதமியுடன் சேர்ந்து அய்யப்பனை போர்வையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இதை மறைக்க அய்யப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் யாருக்கும் தெரியாமல் அவரது உடலை எடுத்து வந்த அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளனர். இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்தோம் என போலீசார் கூறியுள்ளார்.