யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும், 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 755 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை, கண்டாவளை ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த தலா ஒவ்வொருவர்.
யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்2 பேர், யாழ் பல்கலைகழக மாணவன் ஒருவர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.