தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்ததாக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஆ.ராசா.இந்நிலையில் தயாநிதி மாறன் மீண்டுமொரு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் என்பவரை ஆதரித்து தயாநிதி மாறன் எம்பி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா எங்களுக்கு அம்மா என்றும், மோடி எங்களுக்கு அப்பா என்றும் கூறுகிறார்.அப்படி என்றால் என்ன உறவுமுறை என்று நீங்களே பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
பொதுவாக பெண் தலைவர்களை அம்மா என்றும், ஆண் தலைவர்களை அப்பா என்றும் அழைப்பது வழக்கம் தான், இதனை உறவுமுறையுடன் ஒப்பிட்டு பேசியது கண்டனத்துக்கு உரியது என கொந்தளித்துள்ளனர் அதிமுகவினர்.