முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் நாளைய தினம் வரை வெளிநாடு செல்வதில்லை என தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு்ளளவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டப்ளியூ.டி.லக்ஷ்மன் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத காரணத்தினால், அவர் வெளிநாடு செல்ல நாளைய தினம் வரை தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகார.பிரியந்த ஜயவர்தன, விஜித் மலால்கொட மற்றும் எல்.ரி.பீ. தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் அமர்வின் முன் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உட்பட சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.