எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோப் தலைவரிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அவர் முன்வைத்துள்ளார். குறித்த விசாரணைக்காக தன்னையும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் கோப் குழு முன்னிலைக்கு அழைக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல், இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் பொதுமக்களை தவறாக வழிநடத்தினாரா எனவும் விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.