பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் உலக அளவில் பெரிய எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.
இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30-ம் திகதி திரையில் வெளியாகயுள்ளது.
மேலும் இந்த படத்தின் டீசர் நாளைய தினம் வெள்ளிகிழமை (08-07-2022) வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான த்ரிஷாவின் குந்தவை போஸ்டர் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தற்போது த்ரிஷாவின் குந்தவை போஸ்டருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் மற்றும் பின்னணி பாடகி சிவாங்கியின் புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில் குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.