காதில் ஹெட் செட் அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை ரயில் மோதி இளைஞரட சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியைச்சேர்ந்த சேர்ந்தவர் வீரபத்திரன் என்பரின் மகன் வெங்கடேஷ் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நேற்று இரவு தங்களது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார்.
அப்பொழுது காதில ஹெட்செட் மாட்டிக் கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்டபோது ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலிஸார் வெங்கடேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.