தூர பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்தில் பெண்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளையடிக்கும் இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
சகஜமாக பேசி அவர்களுடன் நெருக்கமாவதுடன், தூக்க மாத்திரை கலந்த உணவு ஒன்றை வழங்கி பெண்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நீர்கொழும்பு விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய நீண்ட காலங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய சந்தேக நபர் நேற்று ராஜாங்கன – வராவெவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு தொகை தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த இளைஞன், பத்திரிகைகளில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்களை தொடர்பு கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.