இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 59,000-க்கும் அதிகமான கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59,118 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆறு மாதங்களில் பதிவாகாத புதிய அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
புதிதாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள ‘இரட்டை உருமாற்றம்’ அடைந்த (E484Q + L452R) கொரோனா வைரஸால் மொத்தம் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 257 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,60,949-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,846,652-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதன் சீற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த அக்டொபர் 18-ஆம் திகதி 61,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து குறைந்துவந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 2 வாரங்களாக மீண்டும் அதிகரித்துவருகிறது.
இதனால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், மக்களை முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என அணைத்தது கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளையும் கடைபிடிக்க வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.