இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆசிட் ஊற்றி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா நகரத்தில் உள்ள அவரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் சோனம்.
அவரும், அதே மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் தேவேந்திரா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் தேவேந்திரா தான் வேறொரு பெண்ணை மணந்துகொள்ளப் போவதாக சோனமிடம் கூறியுள்ளார்.
இதனால், மிகுந்த கோபத்துக்கு ஆளான சோனம், வியாழக்கிழமை ஒருமுறை தன்னை வந்து சந்திக்குமாறு தேவேந்திரனை கேட்டுள்ளார்.
தேவேந்திராவும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை ஏமாற்றியதால் கடும் ஆத்திரத்தில் இருந்த சோனம், திட்டமிட்டு தேவேந்திரா மீது ஆசிடை ஊற்றியுள்ளார்.
பின்னர், முகம் கருகிய நிலையில் Sikandra-வில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், தேவேந்திராவை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்துக்காக சோனம் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆக்ரா பொலிஸ் தெரிவித்துள்ளது.
சோனம் மீதும் ஆசிட் பட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக
தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைத்த காதலனை ஆசிட் ஊற்றி செவிலியர் கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.