தனது அண்ணன் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னை மிரட்டியதால் தங்கை ஒருவர் கடிதம் எழுதிவிட்டு காணாமல் சென்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காணாமல் போன சிறுமி குறித்த பகுதியையுடைய சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா என தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்த சிறுமி காணாமல் போன நிலையில் பெற்றோர் வீடு முழுவதும் தேடியதில் சிறுமியின் கட்டிலின் கீழ் சிறுமி விட்டுச்சென்ற கடிதம் சிக்கியது.
அதில் தன்னை அண்ணன் முறையான 21 வயது உடைய முருகனுடன் நட்பாக பழகி வந்ததாகவும், முருகன் தனது புகைப்படங்களை ஆபாசமாக எடுத்து வைத்துக்கொண்டு அதில் இருவரும் சேர்ந்து இருப்பது போல சித்தரித்து தன்னை தொடர்ந்து மிரட்டுவதாகவும், உல்லாசத்துக்கு வரவில்லை என்றால் நாசம் செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும், சிறுமி தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவருடன் சென்று செல்போனில் உள்ள ஆபாச படங்களை டெலிட் செய்து விட்டு திரும்பி வந்து விடுகிறேன் என உருக்கமாக அதில் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.