வட்டவளை – விக்ட்டன் மேற் பிரிவு தோட்டத்தில் ,நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
42 வயது உடைய, திருமணமாகி குழந்தைகள் இல்லாத குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர் வீட்டு பாவனைக்கு விறகு தேடி சென்ற நிலையில் , மீண்டும் வீடுதிரும்பாத காரணதினால் ,வீட்டாரும் ,தோட்ட மக்களும் ஒன்று கூடி தேடி பார்த்த பொழுதே சடலத்தை இனங்கண்டுள்ளனர்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அடைந்த மக்கள் ,வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் அங்கு சென்று பார்வை இட்டு , இறந்த நபரின் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் , ஹட்டன் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்த பின்னரே சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லபட்டு, சட்ட வைத்திய அதிகாரியின் முன்னால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளபடும் என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .
மேலும் இச் சம்பவம் கொலையா ? அல்லது விபத்து மரணமா? என வட்டவளை பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்கின்றனர் .