திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் கணவர் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டி காயமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (22) பிற்பகல் 3.00மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த வீ.திவ்யா (30) எனவும் தெரியவருகின்றது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் மதுபோதையில் வந்து கழுத்தை கத்தியால் வெட்டி காயமுற்ற நிலையில் அயலவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து வந்ததாகவும் இதேவேளை பிரதேச மக்கள் மனைவியை கத்தியால் வெட்டிய குறித்த கணவரை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.