வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில் மாமடு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பிரதேசவாசிகளால் தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த மனித எச்சம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனித எச்சம் காணப்பட்ட இடத்திற்கு அருகில் நஞ்சுப்போத்தல் ஒன்றும் காணப்பட்ட போதிலும் குறித்த மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.