கடந்த வியாழக்கிழமை திருகோணமலை பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் நிலையில் நேற்று காலை அவர் இராணுவத்தினரால் காட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஈச்சநகர் காட்டுப்பகுதியில் காணாமல் போன நிலையில் இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து இளைஞர் கூறியதாவது,
காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்து உண்பதற்காக சென்ற வேளையில் தான் தனியாக சென்றபோது கரடி துரத்தியதில் வழிமாறி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனால் தான் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞரை இராணுவத்தினர் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.