சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைக்கால் கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ளார்.
வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக குறித்த சடலம் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல, கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து இவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட் நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.