அரசியல் பொருளாதாரரீதியில் சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணயநிதியத்துடனும் ஏனைய நிதி அமைப்புகளுடனும் அமெரிக்கா நெருங்கிய தொடர்பில் உள்ளது சர்வதேச சமூகம் தனது முழு ஆதரவை வழங்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் (Antony Blinken) பிரதமர் ரணிலிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.