இந்தியாவில் புதிதாக ‘Double Mutant Variant’ எனப்படும் இரட்டை உருமாற்றம் அடைந்த பயங்கரமான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் கோவிட் வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்தியா முழுவதும் 18 மாநிலங்களிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சோதனை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த புதிய ‘Double Mutant Variant’ கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
‘Double Mutant’ வைரஸ் என்றால் ‘ஒரே வைரஸில் இரண்டு பிறழ்வுகள் அல்லது இரண்டு உருமாற்றம் நடந்திருக்கும்’ என வைராலஜிஸ்ட் Shahid Jameel கூறியுள்ளார்.
சோதனை மேற்கொள்ளப்பட்ட 10,787 மாதிரிகளில், 771 மாதிரிகள் உலகின் மற்ற நாடுகளில் கண்டறியப்பட்ட வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
736 மாதிரிகள் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 34 சோதனை மாதிரிகள் தென்னாபிரிக்க வகை உருமாறிய வைரஸாலும் மற்றும் ஒரே ஒரு சோதனை மாதிரி பிரேசில் வகை உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த Double Mutant Variant-ஐ பற்றி விரைவில் முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் (புதன்கிழமை) இதுவரை 47,272 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 275 பேர் இறந்துள்ளனர். நாட்டின் மொத்தம் 11.7 மில்லயன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 160,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.