இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்று வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கும் பணிகள் இன்று அல்லது நாளைய தினம் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் 14 மற்றும் 16ஆம் திகதிகளிலும் டீசல் அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போது டீசல் மற்றும் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள கப்பல் ஒன்றிலிருந்து தற்போது மசகு எண்ணெய் தரையிறக்கப்படுகிறது.
இதன் ஊடாக எரிபொருளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளுக்காக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதனூடாக நாளாந்தம் ஆயிரம் மெட்ரிக் டன் டீசல், 600 முதல் 800 மெட்ரிக் டன் அளவான மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் என்பவற்றை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.