கனடாவில் தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்த நபர் ஆண்டுக்கணக்கில் இருவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவில் உள்ள மிசன் கிறொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் தன்னார்வலராக இருப்பவர் ஜோஸ் போர்டிலோ (62).
இவர் தேவாலயத்துக்கு அடிக்கடி வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரையில் இவ்வாறான செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சமீபத்தில் ஜோஸை கைது செய்துள்ளனர்.
அவர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோஸால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அது குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.