பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில், 343 பேர் உயிரிழந்துள்ளதால், நாடு கடுமையான எச்சரிக்கை நிலையை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை வீசத்துவங்கிவிட்டது. குறிப்பாக பிரான்சில் கொரோனா 100,000 பேரிற்கு 307.8பேர் என்ற விகிதத்தில் கொரோனாத் தொற்று விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த விகிதம் 200 இனைத் தாண்டினாலே, அது கடுமையான எச்சரிக்கை நிலை ஆகும். மருத்துவமனைகள் அனைத்தும் பெரும் அழுத்ததில் உள்ளன.நவம்பர் மாதம் பிரான்சினைக் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கியபோது இருந்ததை விட, மருத்துவமனைகளில் கொரேனாத் தொற்று நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுகூடங்களின் பெறுபேறுகள் முழுமையாகக் கிடைக்காத காரணத்தினால், திங்கட்கிழமைகளில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 3000 முதல் 4000 வரை மட்டுமேமாக உள்ளது.இருப்பினும், கூட கடந்த 24 மணி நேரத்தில் 15, 792 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் தொற்றிற்குள்ளானவர்களின் தொகை 4298395-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், 343 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92,621 ஆக உயர்ந்துள்ளது.இதில் மருத்துவமனைகளில் மட்டும் 67,216 பேர் உயிரிழந்துள்ளனர்.