தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளை தற்போது ஸ்பெயின் நாட்டில் தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கின்றன.
இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தல 61 படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வி இப்போது கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளன. யாராக இருக்கும் என சீட்டு குலுக்கி போட்டு பார்க்கும் அளவுக்கு ஆர்வமாக உள்ளார்களாம்.
அந்த வகையில் தல61 படத்தை இயக்க சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் போன்றோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அஜீத்தை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.
ஆம். வினோத்துக்கு தான் தல அஜித் தன்னுடைய தல 61 படத்திற்கான வாய்ப்பை கொடுத்துள்ளாராம். ஏற்கனவே வினோத் அஜீத்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அஜீத் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தல அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் என்பது தெரிந்த விஷயம் தானே. இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.