இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக, இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் விபரங்களை கோரியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி 2022ஆம் ஆண்டு மே 13ஆம் திகதியன்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது,
இந்த தகவலை அடுத்து இந்திய புலனாய்வுப் பிரிவினர், விசாரணை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிப்பார்கள் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் ஏனைய அனைத்துத் தகவல்களும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
அதேநேரம், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.