பிரதமர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டிருந்த பெயர்கள் ஜனாதிபதிக்கு இன்னும் அனுப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (11) இடம்பெற்ற சுயாதீன குழுவினரின் கூட்டத்தில் சுயாதீன குழுவினால் பிரதமர் பதவிக்காக சில பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது