பிரபல திரைப்பட நடிகர் கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சியையும் நடத்தி வருகிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட கார்த்திக் முடிவு செய்திருந்தார்.
அதற்கான தேர்தல் பணிகளில் கார்த்திக் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்#நடிகர்கார்த்திக் pic.twitter.com/RqXhVD4bBv
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 21, 2021