நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் போது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நிட்டம்புவவில் அவரது காரைத் தடுத்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்ததாக தெரிவித்த பொலிஸார், பின்னர் அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்றபோது அவர் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது