உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை கொழும்பின் சில பாகங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அத்துடன் கலவரம் ஏற்பட்ட காலி முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே மறு அறிவித்தல்வரை ஊரடங்கு உத்தவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய செய்தி
மேல் மாகாணம் முழுதும் ஊரடங்கு
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!
மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது.
இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.