பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா செய்ய உள்ளார்.
அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார்.
அதற்கு பிறகே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன