அவிநாசியில் மது பேதையில் ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் சென்று நின்று கொண்டிருந்த லாரியில் மோதியதில் 4 பேரும் பலியானான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை பூலுவபட்டி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் இவரின் நண்பர்கள் குட்டி, ஆனந்த், இன்னோரு பாலமுருகள் ஆகியோர் இரவில் மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கு ஏறியுள்ளது. பிறகு, ஒரே ஸ்கூட்டியில் 4 பேரும் கோவை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறான வேகத்தில் கத்திக் கொண்டே சென்றுள்ளனர். ஈட்டி வீரம்பாளையம் பகுதியில் வந்த போது, அதிவேகத்தில் சென்ற ஸ்கூட்டி நிலை தடுமாறி டயர் பஞ்சராகி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் பாலமுருகன், குட்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இன்னொரு பால முருகன், ஆனந்த் ஆகியோரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இவர்களும் அடுத்ததுடுத்து உயிரிழந்தனர். மது போதையில் கண் மண் தெரியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்று 4 இளைஞர்களும் பலியான சம்பவம் திருப்பூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அரக்கனால் ஏற்படும் உயிரிழப்புகளை எப்போதுதான் அரசு தடுக்கப் போகிறதோ… தெரியவில்லை.