மகாநாயக்க தேரர்களின் யோசனைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தில் கூடிய சங்க மாநாட்டில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இதன்போது பிக்குகள் கோரிக்கை விடுத்தனர்
அவ்வாறு செய்யப்படாவிட்டால், மூன்று பீடங்களின் மகாநாயக்கர்களின் தீர்மானப்படி, அனைத்து அரசியல்வாதிகளையும் நிராகரிக்க உறுதிமொழி எடுக்கப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் இல்லை என்ற தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் சில கட்சிகளின் உறுதிப்பாடு இல்லைமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.