இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை இன்று (வியாழக்கிழமை) 360 ரூபாயாக அதிகரித்துள்ளன.
இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதத்தின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்ந்து வருகின்றமையே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மத்திய வங்கியினால் நேற்று (27) வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை பெறுமதி 350 ரூபா 49 சதமாகவும் கொள்முதல் விலை 337 ரூபா 82 சதமாகவும் பதிவாகியிருந்தது.