ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கான இரகசியமான டீல்களையே ரணிலும், சஜித்தும் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் பல தடவைகள் கூடியிருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின் கண்களில் மண்ணைத் தூவும் செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இரகசியமான முறையில் திருட்டு டீல்கள் ஊடாக அரசாங்கத்தின் தலைவரைப் பாதுகாக்கும் செய்றபாடுகளை முன்னெடுக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்