அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி மேற்கொண்டுள்ள பாத யாத்திரையில் பல விநோத அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பாத யாத்திரையில் மிகப் பெரிய காகம் ஒன்றும் வாகனத்தில் எடுத்து வரப்படுகிறது. வடிமைக்கப்பட்டுள்ள இந்த காகத்தின் கழுத்தில் குரக்கன் சால்வை அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காகம் மக்களின் கூடுதலான கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. காலிமுகத் திடல் உட்பட நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவவோர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் போது கப்புட்டு காக்கா… காக்கா… பசில்… பசில்… என கோஷமிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பசில் ராஜபக்சவை அடையாளப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பா யாத்திரையில் மிகப் பெரிய காகம் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, காகத்தை ஆங்கலத்தில் கூறாது, கப்புடாஸ் (காகங்கள்) எனக் கூறி இருந்தார்.
இதன் காரணமாக போராட்டகாரர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் போது கப்புட்டு காக்கா காக்கா என கோஷத்தை எழுப்பி வருகின்றனர்