மாத்தறையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்ச சகோதரகளை கூண்டுகளில் அடைத்து மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
நாட்டு மக்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பெரும் இன்னகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். மக்களின் இந்த அவலநிலைக்கு கரணமான ஆட்சியில் உள்ளவர்களை பதவி துறந்து வீடுகளுக்கு செல்லுமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் காலி முகதிடலில் go home gota தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை பிரமர் மகிந்தவின் இல்லத்தின் அருகேயும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மாத்தறையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் உருவ பொம்மைகளை கூண்டுகளில் அடைத்து மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளநிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.