நாட்டில் சவர்க்காரத்தின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சலவை சவர்க்காரம் 100 ரூபாயாகவும், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான சவர்க்காரம் 175 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் ஏனைய சவர்க்காரங்கள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன் காரணமாக , சில சிறப்பு அங்காடிகளில் சவர்க்காரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்றையதினம் கொழும்பு, யாழ்ப்பாணம் பிரதேசங்களில் மக்கள் அங்காடிகளில் குவிந்து பெரும் தொகையான சவர்க்காரங்களை கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.