இலங்கை சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ‘தமிழ் ஈழ சைபர் படை’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவினால் இவ்வாறு குறித்த இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, (http://www.health.gov.lk/) எனும் இணையத்தளத்தின் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.