அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரவிந்தகுமாரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனவும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.