முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்புடனும் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகபெரும கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பரான டலஸ் அழகபெரும சமீப நாட்களாக மகிந்த – கோட்டாபவை எதிர்க்கும் ஒருவராக உள்ளதுடன் தமது நட்பு வட்டத்தில் இருந்த டளசின் கடிதம் மகிந்த – கோட்டாபவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.