இலங்கைக்கான நிதி உதவிகளை துரிதமாக வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கேட்டு கொண்டுள்ளார்.
இன்று வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் (Crystalina Georgia) இடம்பெற்ற சந்திப்பின் போது, இவ்வாறு இலங்கைக்கு உதவுமாறு அவர் (Nirmala Sitharaman) கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவிற்கு (Crystalina Georgia) , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) கேட்டுக் கொண்டதற்கமைய , சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் இலங்கையுடன் தீவிரமாக ஒன்றித்து செயற்படும் என்று அதன் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியா (Crystalina Georgia) உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.